என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

நடிகையும் பா.ஜ., பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து, நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எக்ஸ் தளத்தில் எனது இமெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றி உள்ளனர். ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தள கணக்கை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் தள முடக்கம் குறித்து குஷ்பு அளித்த பேட்டி: சமூக வலைதள பக்கத்தை ஹேக்கர்ஸ் முடக்குவது தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். 2வது முறையான எனது எக்ஸ் தளக்கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளப்பக்கத்தை முடக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.