என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

2025 ஆரம்பித்து இதுவரை வெளிவந்த 70 படங்களில் நான்கைந்து படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்து சில பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதால் திரையுலகில் உள்ளவர்கள் ஒரு எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த வாரம் அஜித் நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படம் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் பற்றி இரு வேறு மாதிரியான விமர்சனங்கள் வந்தாலும் படம் தரும் வசூல் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் கோடை விடுமுறையில் வரும் படங்கள் எப்படியாவது வசூலை அள்ளித் தரும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
இந்த சம்மரில் மேலும் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் திரையுலக வட்டாரங்களில் ஆர்வத்துடன் உள்ளார்கள். ஜுன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள 'தக் லைப்' படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியாகிவிட்டது. அடுத்து இசை வெளியீடு, டீசர், டிரைலர் என வர உள்ளது.
மே 1ம் தேதி வெளியாக உள்ள 'ரெட்ரோ' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. நேற்று மாலை சென்னையில் அப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அடுத்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ள சுந்தர் சி, வடிவேலு கூட்டணியின் 'கேங்கர்ஸ்' டிரைலர் வெளியீடு இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
அடுத்து மே மாதம் வெளியாக உள்ள மற்ற சில படங்களின் அப்டேட்டுகளும் அடுத்த வாரம் வரை வெளியாக இருக்கின்ற து. இதனால், தமிழ் சினிமா இந்த சம்மரில் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது என மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். வரும் முக்கிய படங்களும், நல்ல படங்களும் ஓடி வசூலைக் கொடுத்தால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
 
           
             
           
             
           
             
           
            