ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
அஜித் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. அஜித், திரிஷா, பிரியா வாரியர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். கடந்த 10ம் தேதி வெளியான படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அடுத்து படத்தில் அஜித் இணைவதாகவும் தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் வெற்றியை கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் 'வெற்றிக்கு மகிழ்ச்சி. ஆனால் வெற்றி கொண்டாட்டங்களை அடக்கி வாசியுங்கள்' என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து வெற்றி விழா என்பதற்கு பதிலாக நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக மாற்றி அதனை நட்சத்திர ஓட்டலில் நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது : 7வது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான். நான் அஜித் ரசிகனாக மாறாமல் இருந்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. சினிமாவுக்கு வராமல் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்திருப்பேன். அஜித்தின் ரசிகராக இருந்தால், என்ன நடக்கும் என்பது இந்த தருணத்தில் எனக்கு நிதர்சனம் ஆகியுள்ளது.
நான் எப்போதும் அஜித்திற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போது நான் சரியான சினிமா வாழ்க்கை இல்லாத இயக்குநர். பெரிய ஹிட் இல்லாத இயக்குநர். எனது முதல் படம் மட்டுமே ஹிட் கொடுத்தது. ஆனால், அஜித்தை பொறுத்தவரையில் எப்போதும் யாரிடமும் வெற்றி தோல்வியை பார்த்தது கிடையாது. ஒரு சக மனிதராக தான் பார்ப்பார். என்னிடம் இருந்து அவர் என்ன கவனித்தார் என்பது எனக்கு இப்போதுவரை கேள்வியாக உள்ளது.
அஜித் தன்னை எப்போது பெரிய ஸ்டாராக கருதியது கிடையாது. அவர் தன்னை ஒரு நடிகராக மட்டுமே நினைக்கிறார். இந்த படம் இந்த அளவிற்கு எனர்ஜியாக இருக்க முக்கிய காரணம், அவரது மொத்த எனர்ஜியும் குட் பேட் அக்லி தான். படத்தின் டைட்டிலை முடிவு செய்தது அஜித் தான். அதில் இருந்து, இரவோடு இரவாக டப்பிங் முடித்துவிட்டு அவர் ரேஸ்க்கு கிளம்பும் வரை தன்னால் முடிந்த அனைத்தையும் இந்த படத்திற்காக கொடுத்துள்ளார். ஐ லவ் யூ அஜித் சார். என்றார்.