குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடிகைகள் படங்களில் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நடிகைகளுக்கும் சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் அவர்களின் விதவிதமான போட்டோஷூட்டுகள் டிரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ஒரு நடிகை ஒரு நிறத்திலான ஆடையில் போட்டோ ஷூட்டில் வலம் வந்தால் தொடர்ந்து அதே ஸ்டைலில் மற்ற நடிகைகளும் போட்டோக்களை வெளியிடுவர். தற்போது கருப்பு நிற ஆடையிலான நடிகைகளின் போட்டோஷூட் வைரலாகிறது.
நடிகை தமன்னா கருப்பு நிறத்திலான ஆடையில் தனது காதலர் விஜய் வர்மா உடன் ‛லஸ்ட் ஸ்டோரிஸ் 2'வுக்காக நெருக்கமான கிளாமரான போட்டோஷூட் படங்களை வெளியிட்டார். கூடவே அதற்கு கேப்ஷனாக ‛காமமா... அல்லது காதலா...' எது வெல்லும் என குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து நடிகை ராஷி கண்ணா அதீத கவர்ச்சியில் கருப்பு நிற உடையில் போட்டோஷூட் வெளியிட்டுள்ளார். அதன் உடன் ‛‛என் ஆன்மாவின் நிறம் அல்ல...'' என குறிப்பிட்டுள்ளார்.
அதேப்போல் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபகாலமாக சற்றே கவர்ச்சி பக்கம் திரும்பி வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரை வெளிப்படுத்தி வரும் இவர் இப்போது கருப்பு நிற உடையில் கால்கள் முழுக்க கருப்பு நிற ஸ்கின் உடையில் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். உடன் ‛‛எவ்வளவு கருப்பு... மிகவும் கருப்பு...'' என குறிப்பிட்டுள்ளார்.