‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா 'கஸ்டடி' படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். வெங்கட் பிரபு இயக்க, இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்.
மே 12ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “என்னுடைய இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இது. தமிழில் என்னைப் பற்றி கடந்த பதினைந்து வருடங்களாக ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால், தமிழ் இயக்குனரான என்னைப் பற்றி இங்கு அவ்வளவாகத் தெரியாது, அதனால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பில்லை. அது எனக்கு சிறப்பானது. எனது முந்தைய படங்களைப் பார்க்காததால் இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பு இருக்காது. தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மாறுபட்ட படமாக இருக்கும். இது ஒரு கடுமையான, ஆக்ஷன், எமோஷனல் படம்.
இப்படத்திற்கு 'சிவா' எனப் பெயர் வைக்கத்தான் திட்டமிட்டிருந்தேன். நாகார்ஜுனா சாரின் அந்த 'சிவா' படம் போல இந்தப் படமும் தீவிரமான ஒரு படமாக இருக்கும். ஆனால், நாகசைதன்யா அதை ஏற்கவில்லை. ''சிவா' படம் ஒரு கிளாசிக் படம். அந்தத் தலைப்பை எந்த ஒரு அழுத்தமான காரணமும் இல்லாமல் வைத்தால் ரசிகர்கள் நிச்சயம் நம்மைக் கொன்றுவிடுவார்கள் என்று சொன்னார்,” என வெங்கட் பிரபு கூறினார்.