லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலரது நடிப்பில் ஐந்து வருடங்களுக்கு முன்பு 2018ல் ஆரம்பமான படம் 'அயலான்'. வேற்றுக்கிரக மனிதன் மற்றும் சிவகார்த்திகேயன் இடையிலான கதையாக இந்தப் படம் இருக்கும் என படத்தின் முதல் பார்வை வெளியான போது யூகிக்க முடிந்தது.
2018 ஜுன் மாதம் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படம் ஆரம்பமானது. ஆனால், அதற்குப் பிறகு படத்தைத் தயாரித்து வந்த 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பல வித நிதி சிக்கல்களில் சிக்கியதால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதற்கடுத்து கொரோனா தாக்கம் வேறு படத்தைப் பாதித்தது. விஎப்எக்ஸ் காட்சிகள் அதிகம் நிறைந்த படம் என்பதாலும் அதைத் தரமாகக் கொடுக்க வேண்டும் என்பதாலும் வெளியீடு மேலும் தாமதமாகி வருகிறது.
கடந்த வருடக் கடைசியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் ரவிக்குமார், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், கதாநாயகன் சிவகார்த்திகேயன், படத்தின் கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட கலைஞர்கள் பட வெளியீட்டு போஸ்டரைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.
இயக்குனர் ரவிக்குமார், “இத்தனை வருட காத்திருப்பிற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் மனமுவந்த நன்றி! வரும் தீபாவளிக்கு “அயலான்” வெளியாகிறது என்பதை உங்களுடன் பெரும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.