ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவை அனைத்திலுமே யாஷிகாவை பல லட்சம் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர் திடீரென டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டுவிட்டரின் புதிய சிஇஓ எலான் மஸ்க் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் மீதான கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.
அதன்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் எவரும் ப்ளூ டிக் பெற முடியும். அந்த தொகையை கட்டவில்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருந்தாலுமே ப்ளூ டிக் நீக்கப்பட்டுவிடும். அந்த வகையில் நேற்று ஒரேநாளில் அரசியல் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. நடிகை யாஷிகாவின் டுவிட்டர் ப்ளூடிக் நீக்கப்பட்டுவிட்டது.
இதனால் கடுப்பான யாஷிகா, 'நான் டுவிட்டரிலிருந்து வெளியேறுகிறேன். காசு கொடுத்து அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருக்க முடியாது. டுவிட்டரிலிருந்து பிரபலங்கள் அனைவருமே வெளியேற வேண்டும். டுவிட்டரின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஷாருக்கான் என பல பிரபலங்களின் டுவிட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.