பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் |
தமிழ் சினிமாவின் 80'கள் காலக்கட்டத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் மூத்த நடிகை லெஷ்மியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். ஆனால், அவருக்கான சரியான ரோல் எதுவும் கிடைக்காததால் தற்போது வருமானத்திற்காக சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தியும் ஹோம் பேஸ்ட் பிசினஸாக சோப் மற்றும் அழக சாதன பொருட்களை விற்பனை செய்தும் வருகிறார்.
ந்நிலையில், பிசினஸிற்காக தனது நம்பரை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்த ஐஸ்வார்யாவுக்கு சிலர் அன்-டைமில் அசிங்கமாக மெசேஜ் செய்து டார்ச்சர் செய்துள்ளனர். இந்த வயதிலும் ஐஸ்வர்யா கவர்ச்சியாக இருப்பதாக ஆபாசமாக பேசி படுக்கைகக்கு அழைத்துள்ளனர். இதனால் பொறுமையிழந்த ஐஸ்வர்யா, தனது யூ-டியூப் சேனலில் தனக்கு தவறாக மெசேஜ் அனுப்பும் நபர்களின் பெயரை வெளியிட்டு அவர்களை கிழி கிழியென கிழித்துள்ளார். மேலும், சில ஸ்கிரீன்ஷாட்டுகளையும் காண்பித்து அவர்களை அம்பலப்படுத்தியுள்ளார். தனக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை வெளிப்படையாக ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பலரும் ஸ்டேண்ட் வித் ஐஸ்வர்யா என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.