நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் விடுதலை. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்போது விடுதலை 2ம் பாகத்திற்காக சில காட்சிகளை ஷூட்டிங் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் விரைவில் ஒடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் நீளம் கருதி திரையரங்கில் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் போது இணைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 20 நிமிட காட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.