ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற சி.ஜ.ஜ தக்ஷின் தென்னிந்திய ஊடக விழாவில் தனுஷ் பங்கேற்றார். அந்த விழாவில் தனுஷ்க்கு யூத் ஜகான் விருது வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து தனுஷ் பேசியது ; நான் 40 வயதில் யூத் ஜகான் விருது பெறுகிறேன். வெல்லவும், சாதிக்கவும் இன்னும் நிறைய உள்ளது. எனக்கு ஒரு லட்சிய கனவு உள்ளது. அந்த கனவின் காரணமாக தான் நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இன்னும் கனவு காண்கிறேன். எனக்கு 30 வயது ஆகும் போது 50 வயதில் உள்ளவர்கள் என்னை பார்த்து இளமையாக இருப்பதாக கூறினார்கள். இப்போது எனக்கு 40 வயது ஆகிறது . 60 வயது உள்ளவர்கள் இன்னும் நீங்கள் இளமையாக உள்ளீர்கள் என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு தனுஷ் சிரித்து கொண்டே கூறினார்.