அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பாலா இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்க ஆரம்பமான 'வணங்கான்' படத்தில் தெலுங்கு நடிகையான கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தமாகி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். ஆனால், பாலா, சூர்யா இடையே மோதல் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து சூர்யா விலகினார். கதையிலும் மாற்றம் ஏற்பட்டதால் கிர்த்தியும் நடிக்க முடியாமல் போனது. தற்போது அப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.
தமிழில் 'த வாரியர்' படம் மூலம் கடந்த வருடம் அறிமுகமானார் கிர்த்தி. ஆனால், அந்தப் படம் இங்கு ஓடவில்லை. அடுத்து முன்னணி நடிகரான சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கலாம், தமிழிலும் தடம் பதிக்கலாம் என நினைத்திருந்த கிரித்திக்கு அந்த வாய்ப்பும் எதிர்பாராமல் பறிபோனது. இப்போது சூர்யாவின் தம்பி கார்த்தியோடு ஜோடி சேரும் வாய்ப்பு வந்ததும் உடனடியாக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
நலன் குமாரசாமி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சைலன்ட்டாக ஆரம்பமாகி நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு கிர்த்தியும் நடித்து வருகிறாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள 'கஸ்டடி' படத்திலும் கிர்த்திதான் கதாநாயகி. அடுத்து ஜெயம் ரவி நடிக்க உள்ள 'ஜீனி' படத்திலும் நடிக்க உள்ளார் எனத் தெரிகிறது.