சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
கதிரேசன் தயாரிப்பு, இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ருத்ரன்'. நாளை(ஏப்., 14) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீட்டை எதிர்த்து, அப்படத்தின் ஹிந்தி டப்பிங், மற்றும் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வாங்கியிருந்த ரெவன்சா குளோபல் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவை வாங்கியிருந்தது.
தயாரிப்பாளர் மேற்கொண்டு 4 கோடி ரூபாயைக் கேட்டதால் அந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இம்மாதம் 24ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் தரப்பின் மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது. ஹிந்தி டப்பிங் ரைட்ஸிற்கும், படத்தை தியேட்டரிலோ, ஓடிடியிலோ வெளியிட எந்த சம்பந்தபமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய தயாரிப்பாளர் கதிரேசன் தரப்பு அதற்கான ஒப்பந்தத்தையும் காண்பித்துள்ளனர். அதை ஏற்று தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, 'ருத்ரன்' படம் நாளை திட்டமிட்டபடி வெளியாக உள்ளது.
இதையடுத்து 'தடைகளை வென்ற ருத்ரன்' என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'தர்மம் தலை காக்கும்' என படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸும் டுவீட் செய்துள்ளார்.