மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் |

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் 'ஜெயிலர்'. இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். நெல்சன் இயக்குகிறார்.
சென்னை, ஐதராபாத், மும்பையில் நடந்து வந்து இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் கொச்சியில் நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் ஏற்கெனவே கொச்சி சென்று விட்ட நிலையில், ரஜினி நேற்று கொச்சி சென்றார்.
ரஜினி வருவதை அறிந்த ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டு ரஜினிக்கு வரவேற்பு கொடுத்ததோடு, அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். ரஜினி ஒரு வாரம் வரை கொச்சியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.




