பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம், களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் உருவாக்கிய கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டரை பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். அந்த போஸ்டர் கேப்டன் மில்லர் ஹேஸ்டேக் உடன் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.




