ஜோக்கர், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்துள்ளார் ரம்யா பாண்டியன். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் அவர், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுடன் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. பல கேள்விகளை எழுப்பிய ஒரு குழந்தைக்கு எல்லா பதில்களையும் வழங்கிய வழிகாட்டி. உண்மையிலேயே ஒரு அற்புதமான பயணம். அவரது விலை மதிக்க முடியாத தகவல்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் என்னுடைய நன்றி என தெரிவித்திருக்கிறார்.