டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிம்பு. இந்த படத்தை அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் சாங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்த அந்த பாடலுக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சிம்பு, அனிருத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த சர்ச்சையை தொடர்ந்து சிம்புவும் அனிருத்தும் எட்டு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு இசையமைக்க போகிறார் அனிருத். தற்போது கமலின் இந்தியன் 2, ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, அஜித் 62 மற்றும் ஷாருக்கானின் ஜவான் என மெகா ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், இந்த வரிசையில் அடுத்தபடியாக சிம்புவின் படத்திற்கும் இசையமைக்கப்போகிறாராம். இது தவிர, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி நடிக்கும் படங்களுக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




