காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ், கடந்த மார்ச் 25ம் தேதி திடீரென காலமானார். அதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனதளவில், உடல் அளவில் அவதிப்பட்டார் பாரதிராஜா. அதனால், அவர் மன ஆறுதலுக்காக, மலேசியாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றார் அவருடைய மகள் ஜனனி. சில மாதங்கள் அங்கே தங்கி இருந்து ஓய்வெடுத்து வந்தார். இப்போது மீண்டும் சென்னை திரும்பிவிட்டார்.
சென்னை நீலாங்கரயைில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நல பிரச்னை, வயது சார்ந்த விஷயங்கள், ஞாபக மறதி ஆகியவற்றால் அவர் சற்றே அவதிப்பட்டு வருகிறாராம். இப்போது அவருக்கு வயது என்பதால் 83 என்பதால, அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். சினிமா நிகழ்ச்சிகள், சினிமாவில் நடிப்பு என வர வேண்டாம். அவர் ஓய்வெடுத்து சரியானபின் அதை பார்த்துக்கொள்ளலாம் என குடும்பத்தினரும் நினைக்கிறார்களாம்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் திரையுலகம் சார்பில் அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடக்க இருந்தது. மனோஜ் மறைவு காரணமாக அதுவும் தள்ளிப்போய்விட்டது. தமிழ்சினிமாவில் அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார். இப்படி 50 ஆண்டுகளை கடந்த கமலுக்கு பாராட்டுவிழா நடந்தது. ரஜினிக்கு நடக்க இருக்கிறது. பாரதிராஜா, இளையராஜாவுக்கும் இப்படிப்பட்ட விழா நடத்தி, அவர்களை வாழும் காலத்திலேயே கவரவிக்க வேண்டும் என்பது திரையுலகினர் பலரின் ஆசையாக இருக்கிறது.