14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் |
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க கவுதம் மேனனின் இயக்கத்தில் அவர் நடித்த படம் ‛துருவ நட்சத்திரம்'. பல்வேறு பிரச்னைகளால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டு, தடைப்பட்டு நடந்து வந்தது.
விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளை மீண்டும் படமாக்கி இருக்கிறார் கவுதம் மேனன். இதோடு இப்படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. ஓரிரு பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே எஞ்சி உள்ளதாகவும், அதுவும் விரைவில் முடிந்துவிடும் என்கிறார்கள்.
ஏற்கனவே இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதால், தற்போது படமாக்கப்பட்ட காட்சிகளின் இறுதிகட்ட பணிகளும் நடத்தப்பட்டு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நீண்டநாள் கிடப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரையில் விரைவில் மின்னப் போகிறது என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.