பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
அஜித்தின் 62வது படம் குறித்த பரபரப்பு இன்னும் ஓயவில்லை. காலையில் ஒரு தகவல், மாலையில் ஒரு தகவல் என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பது அவர் மூலமாகவே உறுதியான பிறகு வேறு எந்த ஒரு இயக்குனரும் அது பற்றி பரபரப்புக்காக ஒரு 'ஹின்ட்' கூட கொடுக்காமல் இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் பல முன்னணி இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள் என்றும், இன்னொரு பக்கம் மகிழ் திருமேனி சொன்ன கதையை ஓகே சொல்லிவிட்டார்கள் என்றும் தகவல். நேற்று இரவு புதிதாக அந்த இயக்குனர்கள் போட்டியில் வெங்கட் பிரபுவின் பெயரும் அடிபட ஆரம்பித்துவிட்டது.
விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தன. விஜய்யின் அடுத்த படமாக 'லியோ' படத்தை அறிவித்துவிட்டு படப்பிடிப்புக்கும் சென்றுவிட்டார்கள். ஆனால், அஜித்தின் அடுத்த படத்திற்கான இயக்குனர் யார் என்பதன் பேச்சுவார்த்தை இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது. இது அஜித் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் யார் என அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், படத்தை அறிவியுங்கள் என்று அஜித் ரசிகர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.