ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜெ.ஆர்.ஜி. புரொடக்சன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிக்கும் படம் லைசென்ஸ். கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தில் பாடகி ராஜலட்சுமி கதையின் நாயகியாக நடிக்கிறார். ராதாரவி, விஜய் பாரத், கீதா கைலாசம், தான்யா அனன்யா, அபியாத்தி ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமான அதிதி பாலமுருகனும் நடிக்கிறார். பைஜூ ஜேக்கப் இசையமைக்க, காசிவிஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி தயாரிப்பாளர் என்.ஜீவானந்தம் கூறியதாவது: கணவன் - மனைவி பாசம், அண்ணன் - தங்கை பாசம், உடன்பிறந்த சகோதரர்களின் பாசம், தாய் - மகள் பாசம் இவைகளை எடுத்துக்காட்டி நிறைய படங்கள் வந்துள்ளது. அதேசமயம் தந்தை - மகள் பாசத்திற்காக வந்த படங்கள் குறைவுதான். அந்த வகையில் பாரதி படைத்த புதுமைப்பெண்ணாக ராஜலட்சுமி தந்தையுடன் களத்தில் சாதிக்கபோகும் படம் தான் லைசென்ஸ்.
இயக்குனர் கணபதி பாலமுருகன் என்னிடம் இந்த கதையை பற்றி சொன்னார். அதுவரை சினிமா மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பு இல்லை. இந்த கதையில் ராஜலட்சுமி தான் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொன்னதும் இந்தப் படத்தை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. என்கிறார்.