வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமாவின் முதல் பெண், முதல் ஆளுமை என்றால் அது டி.பி.ராஜலட்சுமிதான். ஊமை படத்தின் காலத்தில் முதல் நாயகியாக அறிமுகமானார். 1929ம் ஆண்டு அவர் நடித்த 'கோவலன்' என்ற ஊமைப் படம் வெளிவந்தது. அதன் பிறகு 'உஷா சுந்தரி' என்ற ஊமைப்படத்திலும் நடித்தார். தமிழில் முதல் பேசும்படமான 'காளிதாஸ்' நாயகியும் டி.பி.ராஜலட்சுமிதான்.
1936ல் 'மிஸ் கமலா' படத்தினை அவரே சொந்தமாகத் தயாரித்தார். அதனால், தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. அந்தப் படத்தை அவரே இயக்கினார். தமிழின் முதல் பெண் இயக்குநர் எனும் பெயரும் அவரையே வந்து சேர்ந்தது. இந்த படத்திற்கு அவரே திரைக்கதை வசனம் எழுதினார். இசை அமைத்தார். இதன் மூலம் முதல் பெண் திரைக்கதை ஆசிரியர், கதாசிரியர், இசை அமைப்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அதனால் இவரை 'குயின் ஆஃப் தமிழ் சினிமா' என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தஞ்சாவூருக்கு அருகே திருவையாறு எனும் ஊரில் பஞ்சாபகேச அய்யருக்கும் மீனாட்சியம்மாளுக்கும் பிறந்த மகள் தான் ராஜலட்சுமி. ராஜலட்சுமிக்கு எட்டு வயதிருக்கும்போதே திருமணமாகி விட்டது. திருமணமாகிப் புகுந்தவீடு போன ராஜலட்சுமியை வரதட்சணைக் கொடுமை பிறந்த வீட்டுக்கு திருப்பி அனுப்பியது. திடீரென தந்தை இறந்து விட குடும்பத்தை காப்பாற்ற திருச்சி சாமாண்ணா நாடக கம்பெனியில் சேர்ந்தார். அவரின் இனிமையான குரல் அவருக்கு நடிப்பு வாய்ப்பு பெற்று கொடுத்தது. அதன் பிறகு நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தார். 14 படங்களில் நடித்த ராஜலட்சுமி, 1943ல் மரணம் அடைந்தார்.