‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
250 படங்களுக்கு மேல் நடித்த ஹீரோயின் வெண்ணிற ஆடை நிர்மலா. சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அந்த நேரத்தில் அவர் தனது குடும்பத்துடன் கேரளாவிற்கு குடும்ப விழா ஒன்றுக்காக சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கார் புணலூர் அருகே வந்தபோது விபத்தில் சிக்க, நிர்மலா கண் முன்னால் அவரது அண்ணன் துடிதுடித்து இறந்தார்.
சென்னை கொண்டு வரப்பட் நிர்மலா இங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் நிர்மலாவை மருத்துவமனையில் சந்தித்து அவரது சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். அவருக்கு ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர், “உனது அண்ணன் இறந்து விட்டாலும் கடவுள் உன்னை காப்பாற்றி இருப்பது ஏன் தெரியுமா, உன் கடமையில் நீ எதையோ பாக்கி வைத்திருக்கிறாய். அந்த பாக்கி கலை. அதை செய்” என்றார். இந்த வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த நிர்மலா மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
அதன்பிறகு நிர்மலா எம்ஜிஆர் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தார். குறிப்பாக ஜானகியை அம்மா என்றே அழைப்பார். எம்.ஜி.ஆர் வீட்டு சமையல் வேலைகளில்கூட ஜானகிக்கு உதவி செய்வார். பின்னாளில் எம்ஜிஆர் வற்புறுத்தல் காரணமாக அதிமுக.,வில் இணைந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகியால் போடி தொகுதியில் வேட்பாளராக நிற்க வைக்கப்பட்டார். ஜானகி மறைந்ததும் நிர்மலாவும் அதிமுகவை விட்டு விலகினார். பின்னாளில் பா.ஜ., கட்சியில் சேர்ந்தார்.