மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
தனுஷ் இயக்குனராக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கின்றார். அவருடன் இணைந்து அனைக்கா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வொன்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
தற்போது வரை இதன் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. சமீபகாலமாக இந்த படத்திலிருந்து முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது என கூறிவந்த ஜி.வி.பிரகாஷ் இன்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பாடல் வெளியாகிறது. இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.