ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
எதையாவது புதிதாக செய்தால்தான் ரசிகர்களை கவர முடியும் என்பதால் தற்போதைய இளைஞர்கள் புதிதுபுதிதாக யோசிக்கிறார்கள். அந்த வரிசையில் ஜெகன் வித்யா என்பவர் ஒரே திரையில் இரண்டு படங்களை காட்டும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். படத்தின் டைட்டில் பிகினிங். இந்த படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர மூர்த்தி இசை அமைக்கிறார். வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ஜெகன் வித்யா கூறியதாவது: ஒரே திரையில் இரண்டு படங்களை திரையிடுவதை 'ஸ்பிலிட் ஸ்கிரீன்' என்று சொல்வார்கள். திரையின் இடது பக்கம் ஒரு படம் ஓடும், வலது பக்கம் ஒரு படம் ஓடும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.
ஒரே திரையில் ஓடும் இரண்டு கதைகளுக்கும் ஒரு தொடர்பிருக்கும், கடைசியில் இரு கதைகளும் ஒன்றாக இணையும், இது உலகிலேயே புதிய முயற்சி என்று சொல்ல முடியாது. சில குறும்படங்கள் இதுபோன்று வந்திருக்கிறது. ஒரு முழுநீள திரைப்படமாக ஆசியாவிலேயே புதிய முயற்சி என்று சொல்லலாம். என்கிறார்.