புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழக அரசுடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு நடத்தும் 20வது சர்வதேச திரைப்பட விழா ராயப்பேட்டை பிவிஆர் திரையரங்கில் நேற்று தொடங்கியது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. என்றாலும்கூட சர்வதேச திரைப்பட விழா எளிமையான முறையில் நடந்தது. தற்போது நிலைமைகள் சரியாகி எல்லா விழாக்களும் நடக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விழாவும் சிறப்பாக தொடங்கி உள்ளது. இந்த விழாவுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் வழங்கி உள்ளது.
சமீபத்தில், வழங்கப்படாமல் இருந்த 6 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை வழங்கினோம். தற்போது. 2017 முதல் 2021 வரையிலான திரைப்படங்கள், திரைப்பட கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருதுகளை வழங்க தேர்வு குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த விருதுகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவின் இறுதியில் நன்றி தெரிவித்து பேசிய இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பின் செயலாளரும், விழா ஒருங்கிணைப்பாளருமான தங்கராஜ் “இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது” என்று அறிவித்தார்.
விழாவில் சர்வதேச திரைப்பட கலைஞர்கள், விருது பட நடுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழா வருகிற 22ம் தேதி வரை நடக்கிறது. சுமார் 50 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. சிறந்த தமிழ் படங்களுக்கும், கலைஞர்களுக்--ம் 9 விருதுகள் வழங்கப்படுகிறது.