சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சூப்பர் சிங்கர் பிரபலமான ராஜலெட்சுமி சினிமாவில் பின்னணி பாடகியாக சில பாடல்களை பாடியுள்ளார். தற்போது லைசென்ஸ் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகிவிட்டார். இவர் ஆங்கிலத்தில் பாடிய பாடலை பலரும் கிண்டல் செய்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் இளைஞர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கும் ராஜலெட்சுமி ஜீன்ஸ் பேண்ட் சர்ட் அணிந்துள்ளார். இதை பார்க்கும் பலரும் பணம் வந்ததும் ராஜலெட்சுமி மாறிவிட்டார் என கொச்சையாகவும் சில கமெண்டுகளை பதிவிட்டிருந்தனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ராஜலெட்சுமி ஆங்கிலத்தில் பேசுவது எனது விருப்பம். அதேபோல் எனக்கு எந்த உடை விருப்பமோ அதை போடுகிறேன். எனக்கென்று சுய ஒழுக்கம் இருக்கிறது அதை கடைப்பிடிப்பேன். அடிப்படை அறிவு இல்லாதவர்கள் இப்படி தான் பேசுவார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.