சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமானவர் அந்தோனிதாசன். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அந்தோணிதாசன் மனைவியின் தங்கை தான் சூப்பர் சிங்கர் பிரபலமலான ராஜலெட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அந்தோணிதாசன், ‛‛இந்த காலத்தில் பாடல்களை எழுதிய பாடகர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. பாடுகிறவர்களும் இந்த பாடலை எழுதியவர்கள் இன்னார் தான் எழுதினார்என்று சொல்வதில்லை. எங்களுடைய அடையாளங்களை வாங்கி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
என் மனைவி எழுதிய பாடலை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலெட்சுமி பாடியுள்ளனர். அந்த பாடல் பாடியதன் மூலம் பாராட்டுகளையும் புகழையும் பெற்ற ராஜலெட்சுமி எந்த இடத்திலும் அந்த பாடலை எழுதியது தனது சகோதரி தான் என்று கூறவில்லை. இதனால், அந்த பாடலே செந்தில் - ராஜலெட்சுமியுடையது என்றாகிவிட்டது என்று வருத்தத்துடன் பேசி உள்ளார்.