இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து வெளிவந்து 1000 கோடி வசூலைக் கடந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என படத்தின் கதாசிரியரும், ராஜமவுலியின் அப்பாவுமான விஜயேந்திர பிரசாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதே சமயம், அப்படத்தை ராஜமவுலி இயக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க உள்ளார். அதற்கடுத்து 'மகாபாரதம்' படத்தை ஆரம்பிக்கப் போகிறார். அது மூன்று பாகங்கள் கூட உருவாகலாம் என அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் விஜயேந்திர பிரசாத். அதனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா இயக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இரண்டாவது யூனிட் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் கார்த்திகேயா. படத்தின் சில முக்கிய காட்சிகளை அவர் படமாக்கியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போதுதான் இயக்குனர் யார் என்பது தெரிய வரும். அதுவரை பலரது பெயர்கள் அதில் அடிபடலாம்.