பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு |
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இருவரும் லியோ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் மேனன், மலையாள நடிகர்கள் பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் துவங்கியது. கிட்டத்தட்ட படத்தின் பாதி படப்பிடிப்பை அங்கேயே நடத்தினார் லோகேஷ் கனகராஜ். அதைத்தொடர்ந்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் மாறி மாறி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் நடிகர் விஜய் இந்த படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்தார்.
இந்த நிலையில் நேற்றுடன் லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆறு மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளதாக கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், தங்களது முழு மனதையும் இந்த படத்தில் செலுத்தி உழைத்த மொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 19ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.