ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் கமல். இதையடுத்து எச்.வினோத், அதைத்தொடர்ந்து மணிரத்னம் ஆகியோரது படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய பிரபலங்களான இயக்குனர்கள் ராஜமவுலி, கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ், நடிகர் பிரித்விராஜ் ஆகியோர் கமலுடன் சந்திப்பு நிகழ்த்திய அதிசய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படம் ஒன்றை நடிகர் பிரித்விராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்தாலும் இது எதற்காக, எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்கிற எந்த ஒரு விளக்கமும் கூறவில்லை. இதுவரை 4 லட்சம் லைக்குகளை இந்த புகைப்படம் பெற்றுள்ளது. அதேசமயம் இந்த சந்திப்பு பல யூகங்களை ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் கிளப்பி விட்டுள்ளது.
காரணம் இயக்குனர் ராஜமவுலி, கவுதம்மேனன் பிரித்விராஜ், லோகேஷ் என ஒவ்வொரு மொழியிலும் உள்ள முக்கிய பிரபலங்கள், கூடவே தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் சனிசலா என அனைவரும் ஒரே சமயத்தில் கமலை சந்தித்துள்ளது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.. இது யூடியூப் சேனல் ஒன்றின் ‛ரவுண்டு டேபிள்' உரையாடல் நிகழ்ச்சியின் போது எடுத்தப்படம் எனவும் கூறப்படுகிறது.