கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
2002ல் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு ஹிந்தி சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். திருமணத்திற்கு பிறகு ஹாலிவுட் படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். இதன் காரணமாக இந்திய படங்களில் அவர் நடிப்பது குறைந்துவிட்டது.
பிரியங்கா சோப்ரா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சமீபகாலமாக ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் அதிகமாக நடித்து வருகிறேன். அதனால் இந்தியாவையும் இந்திய படங்களையும் ரொம்பவே மிஸ் செய்கிறேன். இந்த நேரத்தில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னதான் ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்தாலும் இனி இந்திய படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.