‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வருகின்ற டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா பாடல்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பணக்காரன் என தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் வடிவேலு தான் பாடி உள்ளார். அவரது நய்யாண்டி பேச்சு ஸ்டைலில் இந்த பாடல் உருவாகி உள்ளது. அவருடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். விவேக் எழுதி உள்ளார். பாடல் வெளியான 16 மணிநேரத்தில் 21 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக ஒரே படத்தில் வடிவேலு இரண்டு பாடல்களை பாடி உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.