விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா |
நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வரும் 2023 ஜனவரி பொங்கல் பண்டிகை ரிலீசாக வெளியாவதற்கு தயாராகி வருகிறது. முதன்முறையாக விஜய் தெலுங்கில் நடித்துள்ளதால் அங்கேயும் இந்த படம் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் என சொல்லப்பட்டு வந்தது. அதே சமயம் கடந்த வாரம் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம், பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படத்துக்கு மட்டுமே ரிலீசில் முன்னுரிமை கொடுக்கப்படும் என அறிவித்ததால் வாரிசு படத்திற்கு எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்காது என ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
இது தமிழிலும் வழக்கமாக இதுபோல தெலுங்கு படங்கள் வெளியாகும்போது உள்ள நடைமுறை தான் என்றாலும், ஏதோ விஜய் படத்தை பொங்கலன்று வெளியிடவே தடை விதித்து விட்டது போல இங்குள்ளவர்கள் சிலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இங்கே தமிழகத்தில் துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதால் அந்தசமயத்தில் வெளியாகும் வாரிசு படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் இங்கேயும் ஒரு பரபரப்பைக் கிளப்பினார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் இரண்டு படங்களுக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக்கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படி இரண்டு பக்கமும் ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் குறிப்பிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த தனது விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நேரில் சந்தித்தார் விஜய். அதேசமயம் அவரது மன்ற பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் என்பவரின் கால்களை தொட்டு விஜய் ரசிகர்கள் வணங்கிய நிகழ்வு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது மன்ற பொதுச்செயலாளரை அழைத்து அவரது செயலுக்காக கடிந்து கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜய் தனது காருக்கு விதிகளை மீறி கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக அவருக்கு போக்குவரத்து துறை 500 ரூபாய் அபராதம் விதித்த நிகழ்வும் நடந்தது. இதை அடுத்து மறுநாளே சென்னையில் நடைபெற்று வரும் அவரது வாரிசு படப்பிடிப்பில் முறையான அனுமதி இன்றி யானைகள் பயன்படுத்தப்பட்டு படப்பிடிப்பு நடப்பதாக கூறி அதிகாரிகள் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தியதாகவும், அதை படம்பிடிக்க சென்ற செய்தியாளர்கள் விஜய் ரசிகர்களால் தாக்கப்பட்டதாகவும் விலங்குகள் நல வாரியம் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் இன்னொரு அதிர்ச்சித் தகவல் வெளியானது.
அந்த வகையில் இந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே கிட்டத்தட்ட ஐந்து விதமான எதிர்மறை விஷயங்களில் விஜய்யின் பெயர் தொடர்ந்து அடிபட்டு கொண்டே வருகிறது. இதில் அவர் தனது காருக்கு கருப்பு கண்ணாடி ஸ்டிக்கர் ஒட்டியதை தவிர மற்ற நிகழ்வுகள் எல்லாமே அவரை சார்ந்தவர்களால் தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு எதிர்மறையாக அமைந்துவிட்ட நிகழ்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது.