8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் |

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடித்துள்ள படம் ‛நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. சுராஜ் இயக்கி உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. வடிவேலுவுடன் ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், சஞ்சனா சிங், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், ரெடிங் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்க , சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் வடிவேலு பாடிய அப்பத்தா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.




