பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பல வருடங்களாக காதலித்த சமந்தாவும், நாகசைதன்யாவும் 2017ம் ஆண்டு திருமணம் செய்தனர். அவர்கள் திருமணம் கோவாவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அவர்களை சேர்த்து வைக்க இரண்டு குடும்பமும் எடுத்த முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. இந்த நிலையில் பல படங்களில் நடித்து வரும் சமந்தா மையோசிட்டிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்வதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன. வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டத்தின் போது இருவரும் எடுத்த போட்டோ என்று சமூகவலைதளத்தில் ஒரு போட்டோ வைரலானது.
ஆனால் இந்த போட்டோ உண்மையில்லை. சில விஷமிகள் இருவரின் தனித்தனி போட்டோவை எடிட் செய்து இப்படி ஒன்றாக இருப்பது போன்று செய்துள்ளனர். அதை சுட்டிக்காட்டும் விதமாக படத்தில் இருவருக்கும் பின்னால் உள்ள சுவர்கள், தரைத்தளம் ஆகியவற்றை குறிப்பிட்டு இது போலியான படம் உறுதியாக தெரிவித்துள்ளனர்.