கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் |
சமூக வலைதளங்களில் பல பிரபலங்களின் பெயர்களில் அதேபோன்று பல பேர் கணக்கு துவங்கி நிர்வகித்து வருவதால் சில சமயம் குழப்பங்களும், சில சமயம் பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு. அப்படித்தான் நடிகர் கமலுக்கு நேற்று இதேபோன்ற ஒரு பெயர் குழப்பம் ஏற்பட்டு தனது அபிமான இயக்குனர் என நினைத்து ஒரு ரசிகருக்கு பதிலளித்துள்ள சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கமல் தற்போது தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் தவறு செய்த சில போட்டியாளர்களை சற்றே கடுமையாக கண்டித்தார். இது பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து பாராட்டும் விதமாக மவுலி எனும் இளைஞர் கமலுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.
அதற்கு பதிலளித்த கமல், “யாரையும் புண்படுத்தாமல், அநாகரிக வார்த்தைகள் பேசாமல், நகைச்சுவையால் அனைவரையும் ஈர்த்த நல்ல தலைவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தீர்கள். நம்மிடையே நிறைய ஜென்டில்மேன்கள் கொண்ட வரிசை இருக்கிறது. அதில் உங்களுக்கு அடுத்ததாக நானும்” என்று கூறியிருந்தார்.
மவுலி என்கிற பெயரை பார்த்ததும் கமல்ஹாசன், தனது நண்பரும், தான் நடித்த பம்மல் சம்பந்தம் மற்றும் தனது தயாரிப்பில் உருவான நளதமயந்தி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான மவுலி என தவறுதலாக நினைத்து பதில் அளித்துள்ளார்.
இப்படி கமல்ஹாசன் பதில் அளித்தது குறித்து நெட்டிசன்கள் பலரும் கமல் இப்படி தவறாக நினைத்து விட்டதை சுட்டிக்காட்டி பதிவிட்டனர். அது கமலின் கவனத்துக்கு சென்றதும், இயக்குனரும், மூத்த நடிகருமான திரு. மெளலி என தவறுதலாக நினைத்துவிட்டேன். இருந்தாலும், தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி என்று கூறி கமல் அதை சமாளித்தார்.
இதற்கு பதில் அளித்த சம்பந்தப்பட்ட அந்த மவுலி என்கிற நெட்டிசன், “இதை அடையாள தவறால் நிகழ்ந்த நகைச்சுவையாக நான் கருதுகிறேன். ஆனாலும் என்னுடைய செய்தி உங்களை அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இதையே எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சினிமாவில் தொடர்ந்து எங்களை போன்றவர்களை உற்சாகப்படுத்தும் பணியை தொடர்ந்து செய்யவும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்