புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |
ஜெயம் ரவி நடித்த ‛கோமாளி' திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அறிமுக இயக்குனரான இவர் அடுத்ததாக தானே ஹீரோவாக நடிக்கும் விதமாக ஒரு கதையை உருவாக்கி லவ் டுடே என்கிற பெயரில் அந்தப்படத்தை இயக்கியும் உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமா இந்த படத்தை தயாரித்துள்ளது. சத்யராஜ், ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் நாளை நவம்பர் 4 வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்தில் 21 இடங்களில் மாற்றங்களை செய்ய வேண்டுமென கூறிவிட்டனர். அதன்படி சில வார்த்தைகள், சில காட்சிகள் என வெட்டி ஒட்டி மாற்றம் செய்த பிறகே படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் டிரைலர் வெளியானபோதே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல நாயகன் பிரதீப் பேசுவதற்கே கூசுகின்றம் சில அநாகரிக வார்த்தைகளை பேசியிருந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. அது படம் நெடுகிலும் பரவி இருந்ததை தொடர்ந்தே சென்சாரின் கிடுக்கிப்பிடிக்கு ஆளாகி தற்போது மாற்றங்களை செய்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.