Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை தொடர்ந்து சிம்புவிடம் பாராட்டு பெற்ற பிரதீப் ரங்கநாதன்

14 நவ, 2022 - 11:19 IST
எழுத்தின் அளவு:
Simbu-sent-a-bouquet-of-love-to-Pradeep-Ranganathan-for-the-phenomenal-success-of-LoveToday

ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி தானே நடித்திருக்கிறார். இப்படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களுடன் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்து கொண்டு இருக்கிறது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் இதுவரை 40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த லவ் டுடே படத்தை பார்த்த ரஜினிகாந்த் பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார்.
அவரை தொடர்ந்து தற்போது சிம்புவும் அவருக்கு கால் செய்து பாராட்டியதோடு, ஒரு பூங்கொத்து அனுப்பி வைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதோடு, அன்புள்ள பிரதீப் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சிம்பு அனுப்பிய பூங்கொத்தை வீடியோ எடுத்து சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது!வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: ... சென்னை காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஹன்சிகா! சென்னை காளிகாம்பாள் கோவிலில் சாமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)