லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.. அடுத்ததாக இந்தியன்-2 படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். எப்போதுமே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ரகுல் பிரீத் சிங்கின் யோகா பயிற்சி, உடற்பயிற்சி வீடியோக்களும் இணையத்தில் ரொம்பவே பிரபலம் இந்த நிலையில் தற்போது மேக்கப் இல்லாத தனது முகத்தோற்றத்தை வெளியிட்டுள்ள ரகுல் பிரீத் சிங், இதற்காக பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'வித்யாபாலன்.. நம்மை நாமே சுயமாக நேசிக்க வேண்டும் என நீங்கள் சொன்ன வார்த்தைகள், எனக்குள் எந்த அளவுக்கு ஆழமான விதையை விதைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.. நம்மில் பலர் நம்மிடமுள்ள அம்சங்கள் குறித்து சங்கடப்படுவோம்.. சிலவற்றை வெறுக்கவும் செய்வோம். அதனால் வெறுப்பவற்றில் அதிகம் எதிர்மறை கவனத்தைச் செலுத்துவோம். ஆனால் நீங்கள் என்னை யோசிக்கவும், சுயபரிசோதனை செய்துகொள்ளவும் வைத்துவிட்டீர்கள். நான் இப்போது என்னுடைய புரொபைலை கூட நேசிக்க ஆரம்பித்து விட்டேன். அதற்கு காரணம் நீங்கள்தான்.. நன்றி.. பெண்கள் சக்தி” என்று அதில் கூறியுள்ளார்.