100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகன் ஜீவா. 19 வருடங்களுக்கு முன்பு ஆசைஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ராம் படம் அவருக்கு திருப்பமாக அமைந்தது. அதன்பிறகு டிஷ்யூம், ஈ, கற்றது தமிழ், நண்பன், நீதானே என் பொன் வசந்தம், கோ, கவலை வேண்டாம் உள்பட பல படங்களில் நடித்தார். சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஆறுதலாக 83 படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆக நடித்திருந்தது சிறப்பாய் அமைந்தது. தற்போது காபி வித் காதல், கோல்மால், வரலாறு முக்கியம் படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். இது ஒரு கேம் ஷோ. இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா? என்பதுதான் சுவாரசியமான பகுதி. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.