பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
யுவன் சங்கர் ராஜா திரைப்பட இசை அமைப்பாளராகி 25 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, அதை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். முதல் இசை நிகழ்ச்சி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களில் விற்றது சாதனை அளவாக இருக்கிறது.
இதை தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம் தேதி ‛யு அண்ட் ஐ' என்ற தலைப்பில் யுவன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 11 வருடங்களுக்கு பிறகு யுவனின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருப்பதால் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.