பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்த்ராவில் 100 ஆண்டுகள் பழமையான பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது அந்த பங்களாவை புதுப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் ஷாருக்கான். இதன் காரணமாக தனது குடும்பத்துடன் அதே பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகை ரகுல் பிரீத் சிங்கின் கணவர் ஜக்கி பக்னானிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறப்போகிறாராம் ஷாருக்கான். அந்த வீட்டுக்கு மாதம் 24 லட்சம் வாடகையாம். அதோடு, ஷாருக்கான் பழமை வாய்ந்த தனது பங்களாவை புதுப்பிப்பதோடு மேலும் இரண்டு மாடி கட்டுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரைக்கும் ராகுல் பிரீத் சிங்கின் கணவர் வீட்டில்தான் அவரது குடும்பம் குடியிருக்கபோகிறதாம்.