மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்தாண்டு தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து வருவதோடு அவ்வப்போது சில பதிவுகளை போடுகிறார்.
தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஆரோக்கியமான மற்றும் கவனமுள்ள தேர்வுகள் மூலமாக உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். இயற்கையுடன் இணைந்திருந்தால் உங்களுக்கு அற்புதமான உணர்வு கிடைக்கும். பிடித்த விளையாட்டை விளையாடுங்கள். உங்களை அமைதிப்படுத்த தியானம் மேற்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். எனவே சந்தோஷமாக, சிரித்து கொண்டு இருங்கள். காரணம் மகிழ்ச்சியே ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த மருந்து" என தெரிவித்துள்ளார்.