கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'ரெட்ரோ'. அவருடன் பூஜாஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. இப்படம் மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளியான 'கனிமா' எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.




