டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் மோகன்.ஜி. தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயத்தையும், வலியையும் மட்டுமே சினிமா பேசி வந்த நிலையில் மற்ற சமூக மக்களின் நியாயத்தையும் எடுத்துச் சொன்ன படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர். அவர் தற்போது இயக்கி, தயாரித்து வரும் படம் பகாசுரன்.
இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி உள்பட பலர் நடித்துள்ளனர். பருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி மோகன்.ஜி கூறியதாவது : வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான் இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதை களமும் அப்படிதான் அமைந்துள்ளது. கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே பகாசுரன் கதை நகர்கிறது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மகாபாரத கதாபாத்திரங்களுடன் தொடர்புள்ளதாக இருக்கும்.
செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம் பார்த்த பின்தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது. யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவனை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன். என் முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டை பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம்தான். பின் திரெளபதி படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன். குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
செல்வராகவனுடன் பகாசூரன் படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன். அவரும் நடிகராக மட்டும் இருந்தாரே தவிர ஒரு நொடிகூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை. சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார். செல்வராகவன் இதில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த படம். என்கிறார் மோகன்.ஜி.