சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் |
விக்ரம் நடிப்பில் தயாராகி, வருகிற 31ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'கோப்ரா'. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் தென்னிந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் விக்ரம், நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் 'கோப்ரா' பட குழுவினர், மாணவ மாணவிகளை சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்தனர்.
இதை தொடர்ந்து பெங்களூரு சென்ற விக்ரம் அங்குள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பு விழாவில் கலந்து கொண்டார். நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு திரண்ட ரசிகர்களிடம் விக்ரம், கோப்ரா படத்தை பற்றி விவரித்து பேசினார். அதன் பிறகு அவர்களின் கேள்விகளு'கும் பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. அடுத்த கட்டமாக ஐதராபாத்திற்கு சென்றிருக்கிறார்கள். இன்று அங்கு ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திக்கிறார்கள்.