என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் தமிழகத்தை சேர்ந்த ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு சாய்ரா பானு என்ற மனைவியும், அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என்ற இரு மகள்களும் உள்ளனர். சமீபத்தில் ரஹ்மானின் முதல் மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இஞ்ஜினியர் ரியாஸ்தீனுகும் திருமணம் நடைபெற்றது. அதையடுத்து சென்னையை தாண்டி ரஹ்மானுக்கு சொந்தமாக உள்ள பல ஏக்கர் நிலம் கொண்ட இடத்தில் பிரம்மாண்டமாய் திருமண வரவேற்பை நடத்தினார். இதில் ரஹ்மானிடம் இசை பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் அவருடைய இசை கலைஞர்களே மட்டுமே பங்கேற்றனர். மேலும் திரையுலகில் இருந்து பின்னணி பாடகி பி.சுசீலா மட்டுமே இந்த திருமண வரவேற்பில் பங்கேற்றார்.
இந்நிலையில் ஜூன் 10ம் தேதி மகளின் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாய் நடத்த உள்ளார் ரஹ்மான். கும்பிடிப்பூண்டி அருகே ரஹ்மானுக்கு சொந்தமான இடத்தில் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் முக்கிய விஐபி.க்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.