தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கென ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் பவித்ரா லட்சுமி. 'நாய் சேகர், யூகி, ஜிகிரி தோஸ்த், ஒன்ஸ் அபான் எ டைம் மெட்ராஸ்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
நடிப்பதோடு தனது சமூக வலைதள பக்கங்களிலும் பிசியாக இருக்கிறார். லட்சக்கணக்கில் அவரை பின் தொடர்கிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாக அவரது சமூக வலைத்தள வீடியோக்களில் மிகவும் உடல் மெலிந்து தோற்றமே மாறி காணப்பட்டார். இதனால் 'உங்களுக்கு என்ன ஆச்சு என்று' அவரை பின் தொடர்பவர்கள் கேட்டு வந்தார்கள்.
இதற்கு தற்போது பவித்ரா தனது இஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நான் கடுமையான உடல் நல பிரச்னைகளை சந்தித்தேன். இப்போது உடல்நிலை தேறி வருகிறேன். என்றாலும் பிரச்சினை இருக்கிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். திடீரென எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் இருக்கிறது.
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன், இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று , ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது கவலையளிக்கிறது. நான் நல்ல கைகளிலும் சரியான பராமரிப்பிலும் இருக்கிறேன்.
எனது பெயரையும் நல்லெண்ணத்தையும் பணயம் வைத்து, உங்கள் பொழுதுபோக்குக்காக வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஒரு வாழ்க்கையும் எதிர்காலமும் இருக்கிறது. ஏற்கனவே இருப்பதை விட எனக்கு அதை கடினமாக்காதீர்கள். மேலும், தயவுசெய்து, உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ செய்யாத ஒன்றை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள். இவ்வாறு பவித்ரா வீடியோவில் பேசி உள்ளார்.