மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
தீபாவளிக்கு துருவ் நடித்த 'பைசன்', ஹரிஷ்கல்யாணின் 'டீசல்', பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' மற்றும் நட்டி நடித்த 'கம்பி கட்ன கதை', புதுமுகங்கள் நடித்த 'பூகம்பம், கேம் ஆப் லோன்ஸ்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. தீபாவளிக்கு முன்னதாக, அக்டோபர் 17ல் இந்த படங்கள் ரிலீஸ் என்பதால் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது.
ஆனாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தியேட்டர் புக்கிங் எப்படி இருக்குமோ? பெரிய ஹீரோக்கள் இல்லாமல், இளம் ஹீரோக்கள் நடித்த படங்கள் மட்டுமே வருகிறது என்பதால் இந்த தீபாவளி எப்படி இருக்குமோ என்று இந்த படக்குழு யோசிக்கிறது. இதில் பைசன் கபடி விளையாட்டு பின்னணியில் சமூக பிரச்னையை பேசும்படம், டீசல் கதையானது குரூடு ஆயில் திருட்டு பற்றியது, டியூட் படம், திருமணம், உறவு சிக்கல், தாலி பற்றி பேசுகிறது. எனவே 3 படங்களும் பக்கா கமர்ஷியல் படங்கள், யூத்தான கலர்புல் படங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தீபாவளி ரிசல்ட் எப்படி இருக்குமோ என்ற கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது.