அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவின் முக்கியமான படமான வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய 'அந்த நாள்' படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இசை அமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் வெளிநாட்டு திரைப்படங்கள் பார்க்கும் வழக்கம் கொண்டவர். அப்படி அவர் பார்த்து ரசித்த படங்களில் ஒன்று ஜப்பான் இயக்குனர் அகினோ குரோஷேவாவின் 'ராஷோமோன்'. வசனங்களால் கதை சொல்லிக் கொண்டிருந்த சினிமாவில் காட்சிகளால் கதை சொன்ன படம் அது.
ஒரு சம்பவம் நடக்கும் அந்த சம்பவத்தை சுற்றி உள்ளவர்கள் அதை தங்களுக்கு தெரிந்த வகையில் இப்படித்தான் நடந்தது என்பார்கள். அதையெல்லாம் கேட்டு உண்மையில் என்ன நடந்தது என்று கண்டுபிடிப்பதுதான் 'ராஷோமோன்' புகழ்பெற்ற திரைக்கதை.
அதையே மையமாக கொண்டு தமிழுக்கு ஏற்றவாறு ஒரு ரேடியோ நாடகமாக எழுதி ஆல் இந்தியா ரேடியோவிடம் கொடுத்தார் வீணை எஸ்.பாலச்சந்தர். அவர்கள் இந்த கதை மக்களுக்கு புரியாது என்று புறக்கணித்தார்கள். அதே கதையை ஏவிஎம் செட்டியாரிடம் சொன்னபோது அது திரைப்படமானது.
ரேடியோ பொறியாளரான சிவாஜி கணேசன் முதல் காட்சியிலேயே கொல்லப்படுவார். அவரை யார் கொன்றது, ஏன் கொன்றார்கள் என்று சொல்வது படத்தின் திரைக்கதை. இந்த கதாபாத்திரத்தில் பல நடிகர்கள் நடிக்க வைக்கப்பட்டு பின்னர் அது சரிவராமல் கடைசியாக சிவாஜி நடிக்க வைக்கப்பட்டார்.
படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் சஸ்பென்சை சொல்லலாம். சிவாஜியை கொன்றது அவரது மனைவி பண்டரிபாய்தான். கடைசி காட்சி வரை எவருக்கும் பண்டரிபாய் மீது துளியும் சந்தேகம் வராத அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். தனது கண்டுபிடிப்பு ஒன்றை ஏற்றுக் கொள்ளாத அரசாங்கத்தை பழிவாங்க நாட்டுக்கு துரோகம் செய்ய சிவாஜி முடிவு செய்வார். நாட்டுப்பற்று மிக்க அவரது மனைவி நாட்டுக்காக கணவனை கொல்வார்.
பல திரைப்பட கல்லூரிகளில், பல்கலைகழங்களில் 'அந்த நாள்' படத்தின் திரைக்கதை பாடமாக உள்ளது.